×

மாதவரம் மதரசாவில் இருந்து பீகாரை சேர்ந்த 12 மாணவர்கள் மீட்பு: சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

சென்னை: மாதவரத்தில் உள்ள மதரசாவில் பீகாரை சேர்ந்த 12 மாணவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டட பீகாரை சேர்ந்த 12 மாணவர்களை மீட்டு, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு அய்யர் தோட்டம் பகுதியில் மதரஸா பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, பீகாரை சேர்ந்த அப்துல்லா (20) என்பவர், சிறுவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார்.

இந்த பள்ளியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 10 வயது முதல் 12 வயதுள்ள சிறுவர்கள் 12 பேர் தங்கி, பயின்று வந்தனர். இந்நிலையில், இந்தபள்ளியில்  சிறுவர்கள் துன்புறுத்தப்படுவதாக கடந்த 29ம் தேதி, குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் இதுபற்றி கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் ராஜாராமுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது, சிறுவர்களின் முகம், கை, கால், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்கப்பட்ட தழும்புகள் இருந்தன. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அரசு சிறுவர்கள் மருத்துவமனைக்கு  12 பேரையும் அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், மதரசாில் கல்வி பெற சிறுவர்களை பீகாரில் இருந்து அழைத்து வந்ததும், இதற்காக, அவர்கள் பெற்றோர்களிடம் மாதம்தோறும் பணம் பெற்றதும், சரிவர படிக்காத சிறுவர்களை கம்பாலும், வயராலும் அடித்து சித்திரவதை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பள்ளி உரிமையாளர் அக்தர், ஆசிரியர் அப்துல்லா ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ராயபுரத்தில் உள்ள அரசு  காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இணை கமிஷனர் ராஜேஸ்வரி கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களை நேற்று பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பீகார் செல்லும் ரயிலில் வழி அனுப்பி வைத்தனர்.

சிறுவர்களுடன் 4 போலீசார் பீகார் செல்கின்றனர். பீகார் மாநில குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் மூலம் பெற்றோரிடம் ஒப்படைக்க உள்ளனர். இந்த சிறுவர்களுக்கு போலீசார் சார்பில் பரிசு பொருட்கள் மற்றும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன.

Tags : Bihar ,Madavaram Madarasa , Rescue of 12 students from Madhavaram Madrasah, Bihar.
× RELATED 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பேசிய...