×

அடுத்த மாதம் முதல்காரைக்கால்- காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல்: இலங்கை அமைச்சர் தகவல்

கொழும்பு: இலங்கை காங்கேசன் துறைக்கு காரைக்காலில் இருந்து பயணிகள் கப்பல் சேவை அடுத்த மாதம் துவங்குகிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் சேவையை துவங்க இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக   இலங்கை கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபால டிசில்வா அளித்த பேட்டியில், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அடுத்த மாதம் துவங்க உள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறையில் இருந்து காரைக்காலுக்கு இந்த பயணிகள் கப்பல் இயக்கப்படும். ஒவ்வொரு கப்பலிலும் 300 முதல் 400 பயணிகள் பயணிக்கலாம். பயண நேரம் மூன்றரை மணி நேரம். பயண கட்டணமாக இந்திய ரூபாயில் 5000 வசூலிக்கப்படும் என்று தெரிகிறது. ஒவ்வொரு பயணியும் 100 கிலோ பொருட்களை தங்களோடு எடுத்துச் செல்லலாம். யாழ்ப்பாணம் பகுதியில் வர்த்தகத்தை மேம்படுத்தவும், இந்தியா செல்ல விரும்பும் புத்த யாத்திரிகர்களுக்கும் இந்த கப்பல் சேவை பெரிதும் உதவும். விரைவில் திரிகோணமலை, கொழும்புவிற்கும் தென் இந்தியாவில் இருந்து பயணிகள் கப்பல் சேவை துவங்கும் என்றார்.


Tags : Multakaraikal-Kangesanthurai ,minister , Karaikal-Kangesanthurai, passenger ship, Sri Lanka Minister Information
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி