உ.பி. மாஜி எம்.எல்.ஏ தாயின் ரூ. 8 கோடி சொத்து முடக்கம்

காஜிபூர்: உத்தர பிரதேசத்தில் மௌ தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர் முக்தார் அன்சாரி. நிழல் உலக தாதாவாக இருந்து அரசியல்வாதியான முக்தார், இவரது சகோதரரும் பகுஜன் சமாஜ் எம்பி.யுமான அப்சல் அன்சாரி மீது முறைகேடாக பணம், சொத்து சேர்த்ததாக வழக்குகள் உள்ளன.  

இந்நிலையில், இவர்களது தாய் ராபியா கத்தூன், முக்தார் அன்சாரியின் உதவியாளரின் மனைவி இஜாஜூல் அன்சாரி ஆகியோருக்கு சொந்தமாக லக்னோவின் தலிபா பகுதியில் உள்ள ரூ.8 கோடி மதிப்பிலான வீட்டு மனைகளை லக்னோ போலீசார் உத்தர பிரதேச குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கி உள்ளனர். காஜிபூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: