×

நாடாளுமன்றத்தில் ஷூட்டிங் அனுமதி கேட்கும் கங்கனா

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அனுமதி கேட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் எமெர்ஜென்சி என்ற படத்தில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அவர் தயாரித்து இயக்கும் இப்படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் சில காட்சிகளை நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி உள்ளார்.

இதுகுறித்து மக்களவை செயலகத்துக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், எனது திரைப்படம் எமர்ஜென்சிக்கான சில காட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  அரசின் துார்தர்ஷன், நாடாளுமன்ற தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே  படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தனியார் யாருக்கும் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படுவது இல்லை.

Tags : Kangana ,Parliament , Kangana asks permission to shoot in Parliament
× RELATED நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த...