×

இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள் வீசி கம்பால் தாக்குதல்: வலைகளை வெட்டி கடலில் வீச்சு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கற்களை வீசியும், கம்புகளால் சரமாரியாக அடித்தும் விரட்டியடித்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், கடலுக்கு சென்றனர். இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் மீனவர்கள் மீது, கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் மீனவர்களின் விசைப்படகுகளுக்கு வந்து, கம்புகளால் மீன்பிடி உபகரணங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

20க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசினர் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த தாக்குதலை அடுத்து, ராமேஸ்வரம் மீனவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று மீன் பிடித்துள்ளனர். இதனால் நேற்று காலை அவர்கள் குறைந்தளவு மீன்களுடன் கரை திரும்பினர். அவர்கள் கூறுகையில், ‘‘மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்து கப்பலை கொண்டு படகுகளை மோதுவது போல வந்து, இலங்கை கடற்படையினர் எங்களை விரட்டியடித்தனர். மேலும் 20க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை பறித்து, வெட்டி கடலில் வீசினர்’’ என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags : Rameswaram Stones , Sri Lanka Navy Atrocity Rameswaram Fishermen Throwing Stones at Gumbal Attack: Nets Cut and Thrown into the Sea
× RELATED போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை...