எஸ்.பி. வேலுமணியின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் அதிமுகவினர் 3 ஆயிரம் பேர் விரைவில் திமுகவில் இணைப்பு: முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் பேட்டி

கோவை: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், கொள்ளையடித்து சேர்த்த சொத்துகளை பாதுகாக்க அதிமுகவினரை பிச்சைக்காரர்கள்போல் பயன்படுத்தும் எஸ்.பி. வேலுமணியை யாரும் மன்னிக்க மாட்டார்கள். குட்கா வியாபாரிகளிடம் விஜயபாஸ்கர் ரூ.83 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார். இந்த பட்டியலை அடுத்தவாரம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க உள்ளேன். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஊழல் விவரங்களை கடந்த 7 மாதங்களாக சேகரித்து வைத்துள்ளேன்.

கோவை, சேலம், மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் செய்த ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவேன். அதிமுக நிர்வாகிகள் 60 பேர் விரைவில் சென்னை சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளனர். இந்த மாத இறுதியில் 60 பேருந்துகளில் கோவை நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் என 3 ஆயிரம்  அதிமுகவினர் சென்னை சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: