உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: பெனால்டி சூட் அவுட் முறையில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் வென்றது அர்ஜென்டினா

தோகா: உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பெனால்டி சூட் அவுட் முறையில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி தனது வெற்றியை பதிவு செய்தது.  பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு லுசைல் மைதானத்தில் நடக்கிறது.

22வது பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. மொத்தம் 32 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இதுவரை 63 போட்டிகள் முடிவடைந்துள்ளன. 64வது போட்டியான இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் அர்ஜென்டினா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளது.

குரூப் சுற்றின் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் அடைந்த தோல்விக்கு பின், அர்ஜென்டினா அணி பெரும் எழுச்சி கண்டது. அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சியின் கடைசி உலகக்கோப்பைத் தொடர் என்பதால், உலகம் முழுவதும் அர்ஜென்டினா அணிக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

கால்பந்தாட்டத்தில் நட்சத்திர வீரராக ஜொலிக்கும் மெஸ்சி எத்தனை விருதுகள், பட்டங்கள், சாதனைகள் படைத்திருந்தாலும், உலகக்கோப்பையை இதுவரை பார்த்ததில்லை. அதனால் இது மெஸ்சியின் உலகக்கோப்பை என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் பேசி வந்தனர். மறுபுறம் பிரான்ஸ் அணி சாம்பியன் சாபங்களை கடந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பென்சிமா, போக்பா என நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி இறுதிவரை வந்துள்ளதால், அர்ஜென்டினா ரசிகர்கள் சிறிது அச்சத்துடனே இருந்தனர்.

இது போட்டி இன்று நடைபெற்ற நிலையில் 23வது நிமிடத்தில் மெஸ்ஸிகோல் அடித்தார். அதனை அடுத்து  36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். இந்நிலையில், ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்தது. அடுத்து நடைபெற்ற ஆட்டத்தின் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணியினர் அதிர்ச்சி கொடுத்தது.

90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வென்றது

Related Stories: