×

கோடியக்கரை சரணாலயத்தில் ஹாயாக சுற்றித்திரியும் புள்ளிமான், வெளிமான்கள்; சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா கோடிக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் செழித்து வளர்ந்துள்ள புள்ளிமான் மற்றும் வெளிமான்களை காண சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பசுமைமாறா வனவிலங்கு சரணாலயம் 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமான் மற்றும் புள்ளிமான் 500க்கும் மேற்பட்ட குரங்குகள் நூற்றுக்கும் மேற்பட்ட மட்ட குதிரைகள் மற்றும் நரி முயல் மயில் என வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். பசுமைமாறா காட்டில் இயற்கையோடு வனவிலங்குகள் ஒட்டி வாழ்ந்து வருகின்றன.

இந்த வனவிலங்கு சரணாலயத்தில் மான்களுக்கு தண்ணீர் வசதிக்காக 17 செயற்கை தொட்டிகளும் 40 இயற்கையான குளங்களும் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் இந்த வன விலங்கு சரணாலயத்தில் மான் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வரும் அப்பொழுது செயற்கையாக கட்டபட்டுள்ள தொட்டியில் வனத்துறையினர் தண்ணீர் ஊற்றுவார்கள்.
ஆனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோடைகாலத்தில் பலமுறை மழை பெய்ததால் வனவிலங்கு சரணாலயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வரவில்லை கடந்த காலங்களில் சரணாலயத்தில் தண்ணீர் தட்டுபாட்டால் அடிக்கடி மான்கள் காட்டைவிட்டு வெளியேறிவிடும். ஆனால் இந்த ஆண்டு கோடைமழையால் மான்களுக்கு போதிய புல்லும் தண்ணீரும் தட்டு பாடி இன்றி கிடைத்ததால் காட்டை விட்டு மான்கள் வெளியேறவில்லை.

மேலும் உணவும் தண்ணீரும் போதுமான அளவு கிடைத்ததின் காரணமாக மான்கள் நன்றாக செழித்து வளர்ந்து காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. மேலும் மழை அதிகம் பொழிந்து காட்டிற்கு செல்லும் பாதைகளில் நீர் தேங்கியதால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பல நாட்கள் மூடப்பட்டன. இதனால் வனவிலங்குகள் எந்தவித இடையூறும் இன்றி சுதந்திரமாக சுற்றி திரிந்தும், இனப்பெருக்கத்தில் ஈடுபட்டன. இதனால் தற்போது மான்கள், நரிகள், குதிரை, குரங்குகள் முயல்களை, பன்றி கூட்டம் கூட்டமாக சராணலயத்தில் காணப்படுகிறது.

இதனால் சரணாலயத்தில் உள்ள வனவிலங்கு பார்ப்பதற்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வார விடுமுறை நாட்களில் மேம்பாட்டு குழுவின் சார்பில் உணவகம் அமைத்து உணவுகள் வழங்கப்படுகிறது சுற்றுலா பயணிகள் வனவிலங்கு சுற்றி பார்ப்பதற்கு சைக்கிள், மினி வேன், வழிகாட்டி பைனாகுலர் போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் வனவிலங்குகளை காண்பதற்கு காலை 6 முதல் 10 மணி வரை மாலை மூன்று மணியிலிருந்து 6 மணி வரைமிக உகந்த நேரம் என கோடிக்கரை வனச்சரகர் அயூப்கான் தெரிவித்தார்.

Tags : Kodiakkarai Sanctuary , Spotted Deer and Deer roaming freely in Kodiakkarai Sanctuary; Tourists flocked
× RELATED கோடியக்கரை சரணாலயத்துக்கு 10 லட்சம் பறவைகள் வருகை