×

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் செயல்படுகிறது. இங்குள்ள 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில், 2வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 3 அலகுகளில் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் வல்லூர் அனல் மின் நிலையத்தின் 3வது அலகில் நேற்று கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டது.இது சரிசெய்யப்பட்டு மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.

Tags : North Chennai Thermal Power Station , 600 MW power generation affected at North Chennai Thermal Power Station
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு