மராட்டியத்தில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அரசை கண்டித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கட்சிகள் சார்பில் பிரமாண்ட பேரணி

மும்பை : மராட்டியத்தில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான ஆளும் அரசை கண்டித்து சிவசேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கட்சிகள் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. மராட்டியம், கர்நாடகா இடையே நிலவும் எல்லை பிரச்சனை மராட்டிய மன்னர் சிவாஜி, சமூக சீர்திருத்தவாதி, சவுதிர்வை பூலே, ஆகியோர் பற்றிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி சர்ச்சை கருத்துக்களை கண்டித்து மகாவிகாஸ் சக்தி கூட்டணி சார்பில் மும்பையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சிவசேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கட்சிகளை சேர்ந்த பல்லாயிரம் கணக்கானோர் கலந்து கொண்டனர். ஜேஜே மருத்துவமனையில் இருந்து புறப்பட பேரணி சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் வரை சென்றது.

பேரணியில் மார்டியா அரசுக்கு எதிராகவும், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு எதிரியாகவும் கண்டனங்களை எழுப்பிக் கொண்டே சென்றனர். மார்ட்டியத்தின் எல்லைகள் மீட்பதில் ஏக் நாத் ஷிண்டேே அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும், சத்திரபதி புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாகவும் பேரணியில் பங்கேற்ற்றவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.    

Related Stories: