×

3வது இடம் யாருக்கு? குரோஷியா-மொராக்கோ இன்று பலப்பரீட்சை

தோஹா: உலக கோப்பையில் வெண்கலப் பதக்கம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது இடத்துக்கான ஆட்டத்தில் குரோஷியா - மொராக்கோ அணிகள் இன்று மோதுகின்றன. நடப்புத் தொடரின் லீக் சுற்றில் எப் பிரிவில் இடம் பெற்றிருந்த மொராக்கோ, குரோஷியா அணிகள் இன்று 3வது இடத்துக்கான போட்டியில் களம் காண உள்ளன. லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று மொராக்கோ முதல் இடம் பிடித்தது. குரோஷியா 1 வெற்றி, 2 டிராவுடன் 5 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்தது.

இதை தொடர்ந்து நாக் அவுட் சுற்றில் ரவுண்ட் ஆப் 16, காலிறுதியில் அபாரமாக வென்று அரையிறுதி வரை முன்னேறிய இந்த அணிகள் அதில் போராடி தோற்றன. இந்நிலையில், இந்த 2 அணிகளும் இன்று 3வது இடத்துக்காக மல்லுக்கட்டுகின்றன.நடப்புத் தொடரில் மொராக்கோ அணியின் ஆட்டமும், வேகமும் எதிர்தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்து ஆச்சரியப்பட வைத்தது என்றால் மிகையல்ல. அந்த அளவுக்கு இன்று உலகின் கவனம் பெற்ற அணியாக மொராக்கோ திகழ்கிறது. அதற்கேற்ப  ரோமைன்  தலைமையிலான அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஹகீம் ஜியேச்,  அச்ரஃப் ஹகிமி மட்டுமின்றி  அச்ரப் டாரி, ஜாவத், கோல் கீப்பர்  யாசின் போனோ, இலியாஸ்,  அப்டே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.

மொராக்கோ மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும், மோட்ரிச் தலைமையிலான குரோஷியா பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ள அணியாகவே பார்க்கப்பட்டது. அதுவும் குரோஷியா கடந்த முறையை போல் இந்த முறையும் பைனலுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குரோஷிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை  வெளிப்படுத்தினாலும், அர்ஜென்டினா நட்சத்திரம் மெஸ்ஸியின் மாயாஜாலம் அவர்களிடம் இருந்து வெற்றியை தட்டிப் பறித்துவிட்டது. கோப்பை வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்ட நிலையில், 3வது இடமாவது பிடித்து வெண்கலப் பதக்கத்துடன் ஆறுதல் அடைய இரு அணிகளும் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் பைனலுக்கு ஈடான பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.Tags : Croatia ,Morocco , 3rd place for who? Croatia-Morocco is a test today
× RELATED ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான...