×

ரேஸர்பே, கேஷ்ப்ரீக்கு ரிசர்வ் வங்கி தடை

புதுடெல்லி: ரேஸர்பே,கேஷ்ப்ரீ நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி  தடை விதித்துள்ளது. கட்டணம் செலுத்தும் சேவை வழங்கும் நிறுவனங்களான ரேஸர்பே, கேஷ்ப்ரீ  போன்றவை புது வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு  தடை விதித்து ரிசர்வ் வங்கி நேற்று உத்தரவு பிறப்பித்தது.  ரேஸர்பே வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த ஜூலையில் உரிமம் வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது. தற்போது  உரிமம் வழங்குவதற்கான இறுதி கட்ட பரிசீலனை நடந்து வருகிறது. அது தொடர்பாக சில விவரங்களை  ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது. அதுவரை வாடிக்கையாளர்கள் சேர்க்க  தடை விதித்துள்ளது. எனினும் ரேஸர்பேயின் இதர சேவைகள் தொடர்ந்து நடந்து வருகிறது என கூறப்பட்டுள்ளது. கேஷ்ப்ரீ நிறுவனம் சார்பில் எந்த தகவலும் வெளியிடவில்லை.


Tags : RBI ,Razorpay ,Cashfree , Razorpay, Cashfree, RBI, Ban
× RELATED விதிகளை மீறிய வங்கிகளுக்கு அபராதம் விதித்து RBI நடவடிக்கை!!