×

'என்னுடைய வார்த்தையை குறித்து வைத்து கொள்ளுங்கள் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும்': ராஜஸ்தானில் ராகுல்காந்தி பேட்டி

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் பாசிசத்திற்கு எதிரான கருத்தியல் கொண்ட கட்சி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்; பாஜகவை வீழ்த்தப்போவது காங்கிரஸ் தான். தனிப்பட்ட முறையில் என் மீதும் காங்கிரஸ் கட்சி மீதும் திட்டமிட்ட அவதூறு பரப்பப்படுகிறது என  ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார். இந்நிலையில் அவரின் இந்த பாதயாத்திரை இன்று 100-வது நாளை எட்டியுள்ளது.

இதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி; காங்கிரஸ் கட்சி முடிந்து விட்டதாக நிறைய பேர் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் அழிக்க முடியாது, என் வார்த்தைகளை குறித்து வைத்து கொள்ளுங்கள். பாரத ஜனதாவை காங்கிரஸ் வீழ்த்தும்.

காங்கிரஸ் காணாமல் போகிறது என்ற கருத்து பாஜகவினரால் பரப்பப்படுகிறது. காங்கிரஸ் ஒரு கருத்தியல் சார்ந்த கட்சி, பாசிசத்திற்கு எதிராக உறுதியாக நிற்கிறது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மறைந்துவிட்டதாக பாஜக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது.

காங்கிரஸ் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த கட்சி. சிலர் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேற விரும்பினால், சிலருக்கு பாஜகவை எதிர்கொள்ள தைரியம் இல்லை என்றால், அவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவது வரவேற்கத்தக்கது. எங்களுக்கு அவர்கள் வேண்டாம்.

காங்கிரஸ் கட்சியை நம்பி, பாசிசத்தை நம்பாதவர்களையே நாங்கள் விரும்புகிறோம். பாரத் ஜோடோ யாத்திரையின் போது, கட்சித் தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் காங்கிரசை மிகவும் நேசிக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்த்தோம்.

கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை; எந்த பிரச்சினையும் இல்லை. இந்தியாவுக்கு எதிரான போருக்கு சீனா தயாராகி வருகிறது. ஆனால் நமது அரசு இதை ஏற்க மறுக்கிறது. இந்த உண்மையை அரசு மறைக்கிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Tags : Congress ,Rakulkandi ,Rajasthan , 'Take my word Congress will defeat BJP': Rahul Gandhi interview in Rajasthan
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை