தென்காசி மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு: தென்காசி மாவட்ட ஆட்சியர்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் தொழில் குழுக்களுக்கான ஆலோசகர், தொழில்நுட்ப குழு உறுப்பினர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் வாயிலாக உற்பத்தியாளர்கள் நிறுவனம்,  உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் தொழில் குழுக்களுக்கு ஆலோசகர், தொழில் நுட்ப ஆலோசகர் குழு உறுப்பினர் ஒரு மண்டலத்திற்கு 5 பேர் வீதம் என பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

இதற்கு பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த (Farm & Off-Farm) தொழிலில் அனுபவமும், தொழில்நுட்ப திறனும் உள்ள நபர்கள் https://www.tnrtp.org வாழ்ந்து காட்டுவோம் திட்ட இணையதளத்தில் (27.12.2022) தேதி வரை குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகளுக்குட்பட்டு விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories: