×

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஓட்டல்கள் அனுமதி பெற வேண்டும்: ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தோர்

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஓட்டல்கள் அனுமதி பெற வேண்டும் என ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தோர் கூறியுள்ளார். ஓட்டல்களில் நடக்கவுள்ள நிகழ்ச்சி குறித்து போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும், மக்கள் அதிகம் கூடும், கோயில், பொழுதுபோக்கு இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். புத்தாண்டு பாதுகாப்பு பணியில் சுமார் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தோர் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : New Year ,Avadi Police Commissioner ,Sandeep Roy Rathore , New Year celebrations, hotels should get permission, Avadi Police Commissioner Sandeep Roy Rathore
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்