×

தமிழகத்தில் மழை நின்றதால் புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து சரிவு..!!

சென்னை: மழை நின்றதால் புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரங்களில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் ஏரிகள், குளங்கள், நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது, புயல் கரையை கடந்ததால் தமிழகத்தில் மழை குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.

* புழல் ஏரிக்கு நேற்று வினாடிக்கு 426 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 391 கனஅடியாக சரிந்துள்ளது.

* சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 107 கனஅடியில் இருந்து 38 கனஅடியாக சரிந்தது.

* கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 கனஅடியில் இருந்து 16 கனஅடியாக குறைந்தது.

* செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,450 கனஅடியில் இருந்து 611 கனஅடியாக குறைந்தது.

* செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 760 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே,  தஞ்சை மாவட்டம் அணைக்கரை கிழணைக்கு தொடர் நீர்வரத்தால் 12-வது நாளாக கொள்ளிடம் ஆற்றில் 16,002 கன அடி நீர் திறக்கப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடலுக்கு வினாடிக்கு 16,002 கன அடி உபரி நீர் திறக்கப்படுகிறது.

Tags : Tamil Nadu ,Cholhowaram ,Kanankotta , Rain, River, Cholavaram, Kannankottai Lake, Neervaratu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...