×

ஆசனூர், தாளவாடி மலைப்பகுதி கிராமங்களில் தொடரும் யானைகள் அட்டகாசம்: கும்கிகள் சின்னத்தம்பி, ராமு வரவழைப்பு

சத்தியமங்கலம்: ஆசனூர், தாளவாடி மலைப்பகுதியில் விவசாய நிலங்கள், கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை  கட்டுப்படுத்த கும்கி யானைகள் சின்னத்தம்பி, ராமுவை வன அதிகாரிகள் வரவழைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் ஆசனூர், தாளவாடி மலைப்பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் அடிக்கடி புகுந்து விடுகின்றன.

அப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு. மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி கிராம மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இதையடுத்து, கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள், விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜ்குமார் உத்தரவின்பேரில், ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா தலைமையில் ஆசனூர் வனச்சரகர் சிவக்குமார் மற்றும் சிறப்பு குழுவினர் முகாமிட்டனர்.

தொடர்ந்து, வனத்துறையினர் பொள்ளாச்சி டாப்-சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி மற்றும் ராமு ஆகிய 2 கும்கி யானைகளை ஆசனூர் மலைப்பகுதிக்கு வரவழைத்துள்ளனர். இந்த கும்கி யானைகளை பயன்படுத்தி வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க திட்டமிட்டுள்ள வனத்துறையினர் இதற்கென பயிற்சி பெற்ற ஊழியர்கள் கொண்ட சிறப்புக்குழுவினருடன் ஆயத்தமாகியுள்ளனர்.

மேலும் ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள மலைக்கிராமங்களுக்கு கும்கி யானைகளை அழைத்துச்சென்று வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகளை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கை மேற்கொண்ட வனத்துறை அதிகாரிகளுக்கு கிராமமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Tags : Asanur ,Thalawadi ,Atakasam ,Kumkis Chinnamthampi ,Ramu , Asanur, Thalavadi Hills, Elephants roaring, Kumkis Chinnathambi, Ram calling.
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த...