×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 750 கன அடி உபரிநீர் திறப்பு

பல்லாவரம்: சென்னையில் தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் ஏரியில் இருந்து, முதல் கட்டமாக 100 கன அடி தண்ணீரும், அதன் பின்னர் படிப்படியாக உயர்த்தி 3000 கன அடி வீதம் உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், கடந்த 3 தினங்களாக மழை பெய்யாததால், ஏரிக்கு வரும் நீர்வரத்தும் படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால், கடந்த 2 தினங்களுக்கு முன், ஏரியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 1,500 கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முதல் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவும் வெகுவாக குறைந்தது. ஏரியில் 22.37 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. கோடைக்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு 750 கன அடியாக குறைக்கப்பட்டது.  வரும் நாட்களில் ஏரிக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் தடைபடும் பட்சத்தில் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் முழுமையாக நிறுத்தப்படும் என்று ஏரியை கண்காணித்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chembarambakkam lake , Release of 750 cubic feet of surplus water from Chembarambakkam lake
× RELATED துண்டு துண்டாக வெட்டி காவலாளி கொலை;...