×

 5000 கிமீ தூரம் தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை

புதுடெல்லி: 5,000 கி.மீ.க்கு மேல் சென்று தாக்கும் அணுசக்தி திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்தது. ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து அணுசக்தி திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணையை இந்தியா நேற்று சோதித்தது. தற்போது உள்ள அக்னி 4 ஏவுகணை 4,000 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. அக்னி-3 3,000-கிமீ வரம்பைக் கொண்டுள்ளது. அக்னி 2 2,000-கிமீ வரை பறந்து சென்று தாக்கும். ஆனால் அக்னி 5 ஏவுகணை அணுசக்தி திறன் கொண்டதுடன், 5 ஆயிரம் கிமீ இலக்கை சென்று தாக்கக்கூடியது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டது.

Tags : Agni-5 missile test with a range of 5000 km
× RELATED இடைக்கால ஜாமின் பெற்ற கெஜ்ரிவால்...