தொடர்மழையால் வெள்ளப்பெருக்கு: சுருளி அருவியில் 2ம் நாளாக குளிக்க தடை

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை காரணமாக, சுருளி அருவியில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிப்பதற்கு இரண்டாம் நாளாக இன்றும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.  தேனி மாவட்டத்தின் சுற்றுலா தலமாகவும், புணித தலமாகவும் உள்ளது சுருளி அருவி. மேலும் இங்குள்ள கோயில்கள் பிரசித்தி பெற்றவை. இதன் காரணமாக இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் தினமும் வந்து செல்கின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால், சபரிமலையிலிருந்து ஊருக்கு திரும்பும் ஐயப்ப பக்தர்களும் சுருளி அருவிக்கு அதிகளவில் வருகின்றனர்.

இந்நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஈத்தக்காடு, அரிசிப்பாறை, ஊற்று பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று முதல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிப்பதற்கு 2ம் நாளாக இன்றும் தடையை நீட்டித்து வனத்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Related Stories: