ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியரை தண்டிக்க, லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் அவசியம் இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியரை தண்டிக்க, லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. லஞ்சப் புகார் அளித்த நபர் இறந்துவிட்டாலோ, பிறழ்சாட்சியாக மாறினாலோ, பிற சாட்சியங்களை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

லஞ்ச வழக்கு தொடர்பாக அரசு ஊழியர்களை தண்டிப்பது தொடர்பான வழக்கு கடந்த மாதம் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இதனை அடுத்து வழக்கின் வாதங்கள் கடந்த மாதமே நிறைவடைந்தை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்ட நிலையில், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியரை தண்டிக்க, லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் அவசியம் இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது. மேலும், லஞ்சப் புகார் அளித்த நபர் இறந்துவிட்டாலோ, பிறழ்சாட்சியாக மாறினாலோ பொது ஊழியருக்கு எதிரான லஞ்ச வழக்கு விசாரணையை சந்தர்ப்ப சூழ்நிலை உள்ளிட்ட பிற சாட்சியங்களை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை விசாரணை நீதிமன்றங்கள் எந்தவித கருணையும் காட்டாமல் மிகவும் கண்டிப்புடன் விசரணையை நடத்தவேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: