×

 ஒன்றரை மாதத்தில் முன்னறிவிப்பு இன்றி அந்தமான் விமானங்கள் 16 நாட்கள் ரத்து

சென்னை: சென்னை இருந்தும், அந்தமானில் இருந்தும் எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல், கடந்த ஒன்றரை மாதத்தில் 16 நாள் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்லும் 7 விமானங்கள், அந்தமானில் இருந்து சென்னைக்கு வரும் 7 விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் நேற்று முன்தினம் முதல் வரும் 16ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தமான் விமானநிலைய ஓடுபாதை பராமரிப்பு பணிகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல், கடந்த நவம்பர் 1 முதல் 4ம் தேதிவரை, 15 முதல் 18ம் தேதி வரை, மீண்டும் 29 முதல் டிசம்பர் 2ம் தேதிவரை என 3 முறை மொத்தம் 12 நாட்களுக்கு சென்னை-அந்தமான் இடையே 14 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், 4வது முறையாக நேற்று முதல் வரும் 16ம் தேதிவரை 4 நாட்களுக்கு மீண்டும் சென்னை-அந்தமான் இடையே 14 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு அந்தமான் விமான நிலைய ஓடுபாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் தற்போது விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மீண்டும் 17ம் தேதி சென்னை-அந்தமான் இடையே விமான சேவைகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் அந்தமான் செல்லும் பயணிகளுக்கு முன்கூட்டியே விமான சேவை ரத்து குறித்து அறிவிக்காததால் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.


Tags : Andaman , Andaman flights canceled for 16 days without prior notice in a month and a half
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...