×

மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி; மாதவரம், மணலி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்க மாற்று ஏற்பாடு

சென்னை:  சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மீஞ்சூரில் உள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நாளை காலை 8 மணி முதல் வரும் 18ம்தேதி காலை 8 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக, மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக பகுதி-1க்கான பொறியாளரை 8144930901 என்ற எண்ணிலும், பகுதி-2க்கான பொறியாளரை 8144930902 என்ற எண்ணிலும், பகுதி-3க்கான பொறியாளரை 8144930903 என்ற எண்ணிலும், பகுதி-4க்கான பொறியாளரை 8144930904 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தை 044-4567 4567 (புகார் பிரிவு) என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Meenjoor ,Madhavaram ,Manali , Maintenance work at Meenjoor desalination plant; Alternative arrangements for distribution of drinking water to Madhavaram and Manali areas
× RELATED காரில் கடத்திய 1 டன் குட்கா பறிமுதல்