பில்கிஸ் பானு மனு; எரிச்சல் பண்ணாதீங்க தலைமை நீதிபதி கோபம்

புதுடெல்லி: பில்கிஸ் பானு மனுவை விசாரித்த போது மீண்டும், மீண்டும் ஒரே மனுவை தாக்கல் செய்து எரிச்சலூட்ட வேண்டாம் என்று  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் நடந்த மதவாத கலவரத்தில்  இளம்பென் பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய  கும்பல் குடும்பத்தினரை  கொடூரமான முறையில் படுகொலை செய்தது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து  பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பெலா திரிவேதி ஆகியோர் விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,  நீதிபதி பெலா திரிவேதி வழக்கு விசாரணையில் இருந்து விலகினார். இதையடுத்து புதிய அமர்வு அமைக்கும்படி பில்கிஸ் பானு சார்பில் வக்கீல் சோபா குப்தா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி நரசிம்ஹா தலைமையிலான அமர்வு முன்பு பிசாரணைக்கு வந்தது. அப்போது,’ உங்கள் மனு பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே நிச்சயம் விசாரணைக்கு வரும். ஒரே விஷயத்தை மீண்டும், மீண்டும் குறிப்பிட வேண்டாம். இது மிகவும் எரிச்சலூட்டுகிறது’ என்றார்.

Related Stories: