பைத்தியக்காரனுக்கு தீக்குச்சிகளை கொடுத்தது யார்? மேற்கு வங்கம் போனா பப்புவை பார்க்கலாம்: திரிணாமுல் எம்பிக்கு நிதியமைச்சர் பதிலடி

புதுடெல்லி: மேற்கு வங்கம் போனால், பப்புவை பார்க்கலாம் என்று திரிணாமுல் எம்பி கேள்விக்கு நிதியமைச்சர் பதிலடி கொடுத்து உள்ளார். மக்களவையில் நேற்று முன்தினம் பேசிய திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா, ‘இந்த ஆளும் அரசு, பப்பு என்ற வார்த்தையை உருவாக்கியது. நீங்கள் அதை இழிவுபடுத்தவும், தீவிர திறமையின்மையைக் குறிக்கவும் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் புள்ளிவிவரங்களின்படி, தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இப்போது, உண்மையான பப்பு யார்?’ என்று சொல்லுங்கள் என பேசி இருந்தார். இதற்கு மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி தந்தார்.

அவையில் அவர் பேசியதாவது: சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு குஜராத் அமைதியாக இருந்தது, ஆனால், 2021ல் மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு, ‘எங்கள் கட்சித் தொண்டர்களின் வீடுகளுக்கு தீ வைப்பு, கொள்ளை, கற்பழிப்பு நடந்தது’. ஜனநாயகத்தில், மக்கள் அரசாங்கத்தின் கைகளில் தீப்பெட்டிகளை வழங்குகிறார்கள். எனவே தீக்குச்சியை யார் கொடுத்தார்கள் என்பது கேள்வியாக இருக்கக்கூடாது.  பைத்தியக்காரனுக்கு தீக்குச்சிகளை கொடுத்தது யார் என்பதே கேள்வி.‘யார் பப்பு, எங்கே பப்பு’ என்று ஒரு கேள்வி உள்ளது. உண்மையில், உறுப்பினர்   திரும்பிப் பார்த்தால், மேற்கு வங்காளத்தில் பப்புவைக் கண்டுபிடிக்கலாம். எந்த சந்தேகமும் இல்லை. சாமானிய மக்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய அற்புதமான திட்டங்கள் இருக்கும்போது, ​​மேற்கு வங்கம் அதைச் செயல்படுத்தாமல் உட்கார்ந்து கொள்கிறது. நீங்கள் பப்புவை வேறு எங்கும் தேடத் தேவையில்லை’ என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories: