×

ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 24,100 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
அதேசமயம் மேட்டூர் அணைக்கு நேற்று காலை 8 மணிக்கு விநாடிக்கு 11,600 கனஅடியாகவும், 9.30 மணியளவில் விநாடிக்கு 21,600 கனஅடியாகவும் இரவில் 23,500 கனஅடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 24,100 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து அணை நிரம்பிய நிலையில் உள்ளது.

இதனால் நேற்று இரவு முதல் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 37 நாட்களுக்கு பிறகு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. உபரிநீர் போக்கி மதகுகள் உயர்த்தப்படும் முன்பாக எச்சரிக்கை சங்கு ஒலிக்கப்பட்டது. உபரிநீர் போக்கி மூலம் வினாடிக்கு 2,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 6வது நாளாக இன்றும் 120 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.



Tags : Okanagan ,Mettur Dam , Increase in flow to Okanagan, Mettur Dam
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி