சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் மற்றொரு நடிகைக்கு தொடர்பு: பரிசுப் பொருட்களை வாங்கியதாக புகார்

புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகரின் வழக்கில் மற்றொரு நடிகை நிகிதா தம்போலி ஆதாயம் அடைந்ததாக எழுந்த புகாரையடுத்து, அவருக்கும் இவ்வழக்கில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பணமோசடி வழக்கில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் பாலிவுட் நடிகைகள் நோரா ஃபதேஹி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசுப் ெபாருட்களை வாங்கியதாக மற்றொரு நடிகையான நிக்கி என்கிற நிகிதா தம்போலி மற்றும் சாஹத் கன்னா ஆகியோரின் பெயர்களும் வெளியே வந்துள்ளன. இவர்கள் இருவரும் சுகேஷிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து நிக்கி தம்போலி கூறுகையில், ‘விசாரணையின் போது என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்வேன்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பது அனைவருக்கும் தெரியும். நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதை உலகுக்கு சொல்ல வேண்டியதில்லை’ என்று கூறினார்.

Related Stories: