×

அமெரிக்க மாஜி அதிபரின் மனைவி திடீர் ஜெய்ப்பூர் விசிட்

ஜெய்ப்பூர்: அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் நேற்று டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார். அங்கிருந்து ஜந்தர் மந்தர் வந்த  ஹிலாரி கிளிண்டன், சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்தார்.

ஜந்தர் மந்தரின் துணை இயக்குநர் உபேந்திர சிங் ஷெகாவத், ஜந்தர் மந்தர் கண்காணிப்பாளர் முகமது ஆரிப் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது ஜந்தர் மந்தரில் உள்ள வானியல் கருவிகள் குறித்து ஹிலாரி கிளிண்டன் கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஹிலாரியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஜந்தர் மந்தரின் பார்வையாளர்களின் நாட்குறிப்பில்,  ஜந்தர் மந்தரின் கட்டமைப்பை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக ஹிலாரி கிளிண்டனின் வருகைக்காக ஜெய்ப்பூரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags : Former ,US ,President ,Jaipur , Former US President's wife makes a surprise visit to Jaipur
× RELATED சொல்லிட்டாங்க…