×

ஆவின் பாலகங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் மற்றும் கேக் வகைகளை அறிமுகம் செய்தார் அமைச்சர் நாசர்..!!

சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் மற்றும் கேக் வகைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஆவின் நிறுவனம், பண்டிகை காலங்களை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் பல புதிய இனிப்பு வகைகள் மற்றும் பால் உபபொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. தீபாவளி பண்டிகையின் போது ஆவின் சிறப்பு இனிப்பு விற்பனை பொது மக்கள் மற்றும் நுகர்வோர் பேராதரவுடன் சிறப்பாக நடைபெற்றது.

அதே போன்று, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நுகர்வோர் கொண்டாடும் வகையில் சிறப்பு கேக் வகைகளான பிளாக் பாரஸ்ட் கேக், சாக்கோ ட்ரிபில், ஸ்ட்ராபெரி கேக், பைனாப்பில் கேக், ஒயிட் ஃபாரஸ்ட் கேக்,  பட்டர்ஸ்காட்ச் கேக், ரெயின்போ கேக், பிளாக்கரண்ட் கேக், ரெட் வெல்வெட் கேக், டெத் பை சாக்லேட் கேக், பிளம் கேக் ஆகியவை 800 கிராம், 400 கிராம் மற்றும் 80 மி கிராம் அளவுகளில் ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும். எப்போதும் போல, ஆவின் பொருட்களை பொது மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி பயன்படுத்த வேண்டி கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.

விருகம்பாக்கத்தில் உள்ள அதிநவீன ஆவின் பாலகத்தில் நடைப்பெற்ற சிறப்பு மிக்க நிகழ்வில், பால்வளத்துறை அமைச்சர் நாசர், இக்கேக்கு வகைகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துவைத்தார்.  இவ்விழாவில் மதுரவாயில் தொகுதி எம்.எல்.ஏ காரப்பாக்கம் கணபதி, பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மருத்துவர். ந. சுப்பையன் இ,ஆ,ப., இணை மேலாண்மை இயக்குநர்  திருமதி. K.M. சரயு இ,ஆ,ப. மற்றும் ஆவின் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பொதுமக்கள் மேற்கண்ட கேக் வகைகள் மற்றும் சிறப்பு இனிப்புகளை மொத்தமாக ஆர்டர் செய்ய பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.  

சென்னை    தலைமை அலுவலகம்     : 7358018395
சென்னை - வடக்கு மண்டலம்        : 9566860286
சென்னை - மத்திய மண்டலம்        : 9790773955
சென்னை - தெற்கு மண்டலம்        : 9444728505
கட்டணமில்லா எண்                 : 18004253300    
மின்னஞ்சல் முகவரி                 : aavinspecialorders@gmail.com     

இணைப்பு:  ஆவின் கேக் வகைகள் விலைப்பட்டியல்

வ.எண்       கேக் வகைகள்                                                   அளவு(கிராமில்)           ரூபாய்    
1             பிளாக் பாரஸ்ட் கேக் (Black Forest cake)                         800/400/80                  560/280/70    
2             சாக்கோ ட்ரிபில் கேக் (Choco Truffle cake)                     800/400                      700/350    
3             ஸ்ட்ராபெரி கேக் (Strawberry cake)                            800/400/80                  720/360/70    
4             பைனாப்பில் கேக்  (Pine Apple cake)                            400/80                      360/70    
5             ஒயிட் ஃபாரஸ்ட் கேக் (White Forest cake)                         800/400/80                  720/360/70    
6             பட்டர்ஸ்காட்ச் கேக் (Butter Scotch cake)                         800/400/80                   800/400/70    
7             ரெயின்போ கேக் (Rainbow cake)                                400/80                           500/70    
8             பிளாக்கரண்ட் கேக்  (Black Current cake)                         400/80                           390/70    
9             ரெட் வெல்வெட் கேக் (Red Velvet cake)                         400/80                           600/70    
10             மேங்கோ கேக்   (Mango cake)                                    800                               720    
11             ப்ளூ பெர்ரி கேக்  (Blue Berry cake)                             800                               840    
12             ஜெர்மன் பிளாக் பாரஸ்ட் கேக் (German Black Forest cake)      800/80                       780/70

Tags : Minister ,Nasser ,Christmas ,New Year ,Aavin Palagam , Aavin Balagam, Christmas, New Year, Cake Type, Minister Nasser
× RELATED இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 84 பேர் பலி