×

அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வாழ்த்து..!

சென்னை: ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்ற பிறகு அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என பல்வேறு தரப்பினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி காந்த்;
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன்
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேயர் பிரியா
சென்னை மேயர் பிரியா வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; அமைதியாய் இருந்தாலும்...! அடக்கமாய்த் திகழ்ந்தாலும்...! அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணன் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

வைரமுத்து
வைரமுத்து வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான் இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள் தளபதி மகனே வருக தமிழர்க்கு மேன்மை தருக அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Rajinikanth ,Kamalhaasan ,Udhayanidhi Stalin , Actor Rajinikanth and Kamal Haasan congratulate Udhayanidhi Stalin who has taken over as Minister..!
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...