×

விற்பனை கண்காட்சியில் உற்பத்தி பொருட்களை விற்க சுய உதவிக்குழுக்கள் 20க்குள் முன்பதிவு செய்ய வேண்டும்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியில் பங்கேற்க வரும் 20ம் தேதிக்குள் சுய உதவிக் குழுக்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புது வருடம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநில அளவிலான சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களின் விற்பனை கண்காட்சி வரும் 30ம்தேதி முதல் ஜனவரி 10ம்தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தெரசா மகளிர் வளாகத்தில் நடக்கிறது.

இந்த கண்காட்சியில் கலந்துகொண்டு தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய விருப்பமுள்ள சுயஉதவிக் குழுக்கள் கிண்டி, எண்.100, அண்ணா சாலை, சென்னை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் குழுவின் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். விருப்பம் தெரிவிக்க கடைசி நாள் வரும் 20ம்தேதி.  இதற்காக, திட்ட இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், எண்.100, அண்ணா சாலை, கிண்டி, சென்னை-600 032 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-2235 0636 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : SHGs , SHGs to sell produce at the sale fair must make reservations within 20: Corporation notification
× RELATED கடன் வசூலிக்கும்போது சுய...