×

வியாசர்பாடியில் ஆன்லைன் ரம்மியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: வியாசர்பாடி பள்ளத் தெருவில் ஆன்லைன் ரம்மியை எதிர்த்து, அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆன்லைன் ரம்மியால், தமிழகத்தில் 33 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உயிர் இழப்புக்கு முக்கிய காரணமாக இருந்த ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதனை தடை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், இதுவரை ஆளுநர் அந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதை பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டித்து வருகின்றன.

அந்த வகையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், ஆன்லைன் ரம்மிக்கு ஆளுநர் உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வியாசர்பாடி பள்ளத் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆளுநர் உடனடியாக ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும், இல்லையென்றால் தமிழகத்தில் ஆளுநரை மாற்ற வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டனர். இந்த, ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்.  இந்த, கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் வெங்கடேஷ், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் தினேஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Vyasarabadi , Demonstration against online rummy in Vyasarabadi
× RELATED செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது...