×

துபாய், ரியாத்தில் இருந்து கடத்திய ரூ.1.37 கோடி மதிப்பு தங்கம் சிக்கியது: 4 பேர் கைது

சென்னை: துபாயில் இருந்து இண்டிகோ மற்றும் பிளை துபாய் ஆகிய 2 விமானங்கள், சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தன. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். சென்னையைச் சேர்ந்த 2 பயணிகள் உடமைகளில் பழைய லேப்டாப்புகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன. அதற்குள் சிறுசிறு தங்க துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இரண்டு பயணிகளிடம் இருந்தும் ஒரு கிலோ 57 கிராம் தங்க துண்டுகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.57.76 லட்சம்.  

இந்நிலையில் துபாய் மற்றும் ரியாத்தில் இருந்து பிளை துபாய் மற்றும் கல்ப் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தன. அதில் சென்னையை சேர்ந்த 2 பயணிகளின் உள்ளாடையில் இருந்து 1.710 கிலோ தங்கப் பசையை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.79.29 லட்சம். இரண்டு பயணிகளையும் சுங்க அதிகாரிகள் கைதுசெய்தனர். சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனைகளில், ரூ.1.37 கோடி மதிப்புடைய இரண்டே முக்கால் கிலோ, தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 4 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.


Tags : Dubai ,Riyadh , Gold worth Rs 1.37 crore smuggled from Dubai, Riyadh caught: 4 arrested
× RELATED துபாயைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை!