×

கோல்டன் குளோப் விருதுக்கு போனது ‘ஆர்ஆர்ஆர்’

லாஸ்ஏஞ்சல்ஸ்: ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘ஆர்ஆர்ஆர்’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், கடந்த மார்ச் 25ம் தேதி வெளியான இந்தப் படம், ₹1,150 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்தப் படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது. கோல்டன் குளோப் விருதுக்கு இந்திய படம் நாமினேஷனில் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும். திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது.

ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேஷன் இந்த விழாவை நடத்துகிறது. வரும் ஜனவரி 10ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விழா நடைபெற உள்ளது. இதையடுத்து விருதுக்காக இறுதியாக பரிந்துரை செய்யப்பட்டதில் 5 இடங்களை பிடித்த படங்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ராஜமவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவிலும், நாட்டு நாட்டு பாடல், சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வாகியுள்ளன. அலியா பட் நடித்த கங்குபாய் கத்தியவாடி, ரிஷப் ஷெட்டியின் காந்தாரா, செல்லோ ஷோ ஆகிய படங்கள் விருதுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ படம் மட்டுமே நாமினேஷனில் இடம்பிடித்துள்ளது.

Tags : RRR ,Golden Globe Award , 'RRR' goes to Golden Globe Award
× RELATED ராஜமவுலிக்கு பரிசு கொடுத்த 83 வயது ஜப்பான் பாட்டி