பாஜகவை வீழ்த்துவதற்காக சந்திரசேகர ராவ், மம்தா வரிசையில் நிதிஷ்குமார்: அகிலேஷ் யாதவ் வரவேற்பு

லக்னோ: ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்காக சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களை போல் நிதிஷ் குமாரும் செயல்பட்டு வருகிறார் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். சமாஜ்வாதி கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியதை வரவேற்கிறேன். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து நிதிஷ்குமார் கூறிய கருத்து ஏற்கக் கூடியது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களும் இதைத் தான் செய்து வருகிறார்கள். இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ப்பது குறித்து, அனைத்து தலைவர்களும் அமர்ந்து பேசும் போது நிச்சயம் ஒரு வழி பிறக்கும் என்று நம்புகிறேன். எனது தந்தையின் எம்பி தொகுதியான மெயின்புரி இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றிப் பெற்றுள்ளோம். நாட்டின் பணவீக்கம் இன்று உச்சத்தில் உள்ளது. வேலையின்மை அதிகரித்துள்ளது. அம்பேத்கர் கண்ட கனவு மறுக்கப்படுகிறது’ என்றார்.

Related Stories: