×

நேரு உட்பட எந்த பிரதமரும் இப்படி செய்யவில்லை மோடியின் பேச்சு குறித்து சரத்பவார் கருத்து

மும்பை: எதிர்கட்சிகளை விமர்சிக்க அரசு நிகழ்ச்சிகள் நடக்கும் மேடையை நேரு உட்பட எந்த பிரதமரும் பயன்படுத்திக் கொள்ள வில்லை என்று பிரதமர் மோடியை சரத்பவார் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘நாட்டுக்கு நிலையான வளர்ச்சி தேவை; குறுக்குவழி அரசியல் அல்ல. சில அரசியல் கட்சிகள் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து வருகின்றன. வரி செலுத்துவோரின் பணமானது, ஊழல் மற்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக வீணடிக்கப்பட்டது’ என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் கூறுகையில், ‘நாக்பூரில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேசியதை பார்த்தேன். ஜவஹர்லால் நேரு உட்பட பல பிரதமர்களின் உரைகளை கேட்டிருக்கிறேன். அவர்கள் எல்லாம், எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதற்காக அரசு நிகழ்ச்சிகள் நடக்கும் மேடையை பயன்படுத்தியது இல்லை. அரசியல் பிரசாரத்தின் போது கூட, நேரு தனது அரசியல் எதிரிகளை விமர்சித்தது இல்லை. ஆனால், பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை விமர்சிக்க அரசு நிகழ்ச்சிகள் நடக்கும் மேடைகளைப்  பயன்படுத்துகிறார்; இதுபோன்று எந்த பிரதமரும் செய்ததில்லை’ என்று கூறினார்.

Tags : nehru ,saratbavar ,Modi , Nehru, Modi, speech, Sarathpawar comment
× RELATED நாட்டு மக்கள் அடியோடு நிராகரித்த...