×

முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியில் புதிய சூரியனாக உதயநிதி ஸ்டாலின் ஒளிவிடுகிறார்: டி.ஆர்.பி.ராஜா

சென்னை: இருட்டை விரட்டி அடிக்கும் வலிமை சூரியனுக்கே உரியது தமிழ்நாட்டின் பத்தாண்டு கால இருளை விரட்டிட ஓய்வறியா சூரியனாக உழைக்கும் முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியில் புதிய சூரியனாக உதயநிதி ஸ்டாலின் ஒளிவிடுகிறார் என்று டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.

வழக்கம் போல அரசியல் நரிகளான அடிமைகளின் ஓலங்களும் சங்கிகளின் ஊளைகளும் கேட்கின்றது. அவர்கள் அப்படித்தான். நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது அவரது திறமை மிகுந்த செயல்பாடுகளைத்தான். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ஒரு பேரியக்கத்தின்  இளைஞரணியைத் தலைமை தாங்கி சிறப்பாக செயல்படுபவர் அமைச்சராகும்போது அந்தத் துறையைச் சார்ந்தவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுவது இயல்பு.

விளையாட்டுத் துறையில் ஈடுபடுபவர்கள் இளைஞர்கள். அவர்கள், friendly approach உடன் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிப்பதற்கு எப்போதும் down-to-earthஆக இருக்கும் சின்னவர், அவர்களின் கோரிக்கையின் தன்மையை உணர்ந்து, உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கு மிகப் பொருத்தமானவர் என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு விளையாட்டுத்துறையை வரலாறு காணாத வகையில் மேம்படுத்தி,, இந்திய அளவிலும் உலக அளவிலும் சாதனைகள் படைத்து, பதக்கங்களை வெல்லும் வீரர்-வீராங்கனைகளை உருவாக்குவதில் புதிய முனைப்புடனும் உத்வேகத்துடனும் செயல்பட்டு வருகிறது. பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டிய சென்னை செஸ் ஒலிம்பியாட் அதற்கொரு simple sample. அதிலும் சின்னவரின் பங்கு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

தொகுதிகள் தோறும் நவீன விளையாட்டரங்கம், சென்னைக்கு அருகே சர்வதேச தரத்திலான விளையாட்டு கிராமம் உலகளாவிய போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கு சிறப்புப் பரிசுகள் என விளையாட்டுத்து துறையை அணுஅணுவாக கவனித்து முதல்வர் வளர்த்து வருகிறார் .அவருக்கு உற்றதுணையாக சின்னவரைத் தந்திருக்கிறது கழகம்.

இது விளையாட்டுத் துறையின் பொற்காலம். விளையாட்டுத் துறை மேம்பட்டால் இளைஞர்களின் திறமை மேம்படும்.வேலைவாய்ப்புகள் உருவாகும். மாநிலத்தின் திறனால் நாட்டிற்கே பெருமை சேரும். அதை நோக்கிய பெரும் பாய்ச்சலுக்குத் தமிழ்நாடு தயாராகிறது. விமர்சனங்கள் நொறுங்கும் சாதனைகள் பெருகும். இளைஞர்களே இது உங்களுக்கான ஆட்சி. காத்திருங்கள் பல புதிய முன்னெடுப்புகள் விரைவில் வரும் என்று திமுக எம்எல்.ஏ. டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.


Tags : Udayanidhi Stalin ,Chief Minister ,T. R.R. GP , Chief Minister Headed, In the Corporation Government, New Sun, Udayanidhi Stalin, D.R.P.Raja
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...