×

திருவொற்றியூர் மார்க்கெட்டில் ஏ.எம். விக்கிரமராஜா ஆய்வு

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் 350க்கு மேற்பட்ட காய்கறி, பழங்கள் மற்றும் மீன் கடைகள் உள்ளது.  இந்த கட்டிடம் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏஎம்.விக்கிரமராஜா நேற்று திருவொற்றியூர் மார்க்கெட்டுக்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள வியாபாரிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் வியாபாரிகள், மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இல்லை. கடைகள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு புதிய மார்க்கெட் கட்டி தர வேண்டும்.

மார்க்கெட் பகுதியில் நகர்ப்புற ஆரோக்கிய  சுகாதார நிலையம் அமைப்பதற்காக அப்புறப்படுத்தப்பட்ட 24 கடை உரிமையாளர்களுக்கு மாற்று கடை வழங்க வேண்டும்’’ கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று அனைத்து வசதிகளும் கொண்ட நவீன மார்க்கெட் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று விக்கிரமராஜா உறுதி அளித்தார். அப்போது நிர்வாகிகள் ஆதிகுருசாமி, காய்கறி முருகன், சோலையப்பன், கிருஷ்ணமூர்த்தி, ஜினோராஜ், சேகர் உள்பட பலர் இருந்தனர்.


Tags : Thiruvoteur Market ,MM Wickramaraja , Tiruvottiyur, Market, A.M. Wickramaraja, study
× RELATED ஜனநாயக நாட்டில் யாருக்கும் கருத்து...