அரசு வேலை வாங்கி தருவதாக2 லட்சம் மோசடி அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணியின் டிரைவர் மீது புகார்

திருவண்ணாமலை: அரசு வேலை வாங்கி தருவதாக2 லட்சம் மோசடி செய்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் டிரைவர் மீது, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பழம்பேட்டை பள்ளத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: சேலத்தை சேர்ந்த ஒரு நண்பர் மூலம் கோவை புதூரை சேர்ந்த சுதாகரன் என்பவர் கடந்த 2020ம் ஆண்டு அறிமுகமானார்.

அவர், முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் டிரைவராக பணிபுரிவதாக என்னிடம் தெரிவித்தார். மேலும், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். அதை நம்பி 2020, அக்டோபரில்50 ஆயிரம் அவரிடம் கொடுத்தேன். பின்னர், 2021ம் ஆண்டு ஜனவரியில்50 ஆயிரமும், தொடர்ந்து அவரது வங்கி கணக்குக்கு1 லட்சமும் அனுப்பி வைத்தேன். தலைமை செயலகத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினேன். விரைவில் வேலை கிடைத்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், வேலை கிடைக்கவில்லை.அதைத்தொடர்ந்து, ஆட்சிமாற்றம் ஏற்பட்டுவிட்டது. எனவே, வேலை வாங்கித்தர முடியாது என்று தெரிவித்தார். மேலும், பணத்தையும் தரவில்லை. இதுதொடர்பாக பலமுறை அவரை தொடர்பு கொண்டு பேசியும் இதுவரை பணம் கிடைக்கவில்லை. எனவே, வேலை வாங்கி தருவதாக என்னிடம் வாங்கிய பணத்தை பெற்று தருமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: