×

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு 1500 கன அடியாக குறைப்பு

குன்றத்தூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்தது. இதனால் பாதுகாப்பு கருதி, கடந்த வாரம் ஏரியில் இருந்து, முதல் கட்டமாக 100 கன அடி தண்ணீரும், அதன்பின்னர் படிப்படியாக  3000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை சென்னை புறநகர் பகுதிகளில் வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் ஏரிக்கு வரும் நீர்வரத்தும் படிப்படியாக குறைய தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவின்பேரில் இன்று காலை 9.50 மணிக்கு ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 1500 கன அடியாக குறைக்கப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்வது குறைந்து, ஏரிக்கு வரும் நீர்வரத்தும் குறையும் பட்சத்தில் கோடைக்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு முற்றிலுமாக நிறுத்தப்படும் என ஏரியை கண்காணித்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதிலும் தற்போது வரை ஏரியில் இருந்து 1500 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருவதால் செம்பரம்பாக்கம் ஏரி கரையோரம் வசிக்கும் மக்கள் அனாவசியமாக நீர் செல்லும் வழித்தடத்தில் இறங்கவேண்டாம் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Chembarambakkam , Reduction of Chembarambakkam lake opening to 1500 cubic feet
× RELATED செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை...