×

அரகண்டநல்லூர்-திருக்கோவிலூர் தரைப்பாலம் மூழ்கியது: தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

விழுப்புரம்: தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் அரகண்டநல்லூர்-திருக்கோவிலூர் சாலையை இணைக்கும் தரைப்பாலம் நீரில் முழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து மொத்த கொள்ளளவான 119 அடியில் தற்போது 117 தண்ணீர் எட்டியுள்ளது. அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. வினாடிக்கு 7000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிகம் காணப்பட்டு வருகிறது. திருக்கோவிலூர் மற்றும் அரகண்டநல்லூர் தரைப்பால நீரில் முழ்கியது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. அரகண்டநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் 5 கிலோமீட்டர் சுற்றி திருக்கோவிலூர் வழியாக வருகின்றனர்.

தென்பெண்ணை ஆற்றில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாத்தனூர் அணை திறக்கப்பட்டு தற்போது தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணைகள் இந்த தண்ணீரை தேக்கி வைக்க முடியாதா நிலையில் தற்போது இந்த தண்ணீர் கடலுக்கு செல்கிறது. திருக்கோவிலூர் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலமாக தென்பெண்ணை ஆற்றின் கரையோர இருக்கக்கூடிய மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Aragandanallur ,Thirukkovilur ,Tenpenna river , Aragandanallur-Thirukovilur footbridge sinks: Increase in flow in Tenpenna River
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்