×

வாடகை கட்டிடத்தில் நடைபெறும் பேக் தொழில் இளையான்குடியில் சிப்காட் வருமா?

*தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

இளையான்குடி : இளையான்குடியில் ஏற்றுமதி தரம் வாய்ந்த பேக் கம்பெனி இயங்கி வருவதால், சிப்காட் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இளையான்குடியில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட பேக் கம்பெனிகள் இயங்கி வருகின்றன. இந்த கம்பெனியில் அரியாண்டிபுரம், கோட்டையூர், சிறுபாலை, ஆழிமதுரை, நகரகுடி, கீழாயூர், திருவள்ளூர், சாத்தனி, சோதுகுடி, ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இங்கு நகை, ஜவுளி, பேன்சி ஆகிய கடைகளுக்கும், திருமணம், காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, நிச்சயதார்த்தம் ஆகிய முகூர்த்த விழாக்களுக்கும், சிறிய மணிபர்சு முதல் ஹேண்ட் பேக், லஞ்ச் பேக், நகை பேக், டிராவல் பேக், ஸ்கூல் பேக், லேப் டாப் பேக் மற்றும் அனைத்து வகையான பேக்குகள் தயாரிக்கப்படுகிறது.

இங்கிருந்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. மேலும் பேக் தயாரிப்பு பணிக்கு மூலப்பொருட்கள் டெல்லி, பெங்களூர், மும்பை, சென்னை ஆகிய நகரங்களிலிருந்து வருகிறது. இந்த பேக் தயாரிப்பு கம்பெனிகள் தற்போது வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. மின் பற்றாக்குறை மற்றும் இட வசதி இல்லாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே இளையான்குடியில் பேக் கம்பெனி தயாரிப்பு உற்பத்தியை அதிகரிக்கவும், உலகத் தரம் வாய்ந்த பேக்குகளை உற்பத்தி செய்யவும் சிப்காட் (தொழிற்பேட்டை) அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேக் தயாரிப்பு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேக் கம்பெனி உரிமையாளர் பழனி கூறுகையில், இளையான்குடியில் தயாரிக்கப்படும் பேக் ஏற்றுமதி தரம் வாய்ந்தது. சுமார் 500 குடும்பங்கள் இந்த தொழிலை நம்பி உள்ளனர்.
பேக் கம்பெனி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அரசு சிப்காட் அமைத்து வங்கிகள் கை கொடுத்தால் பல குடும்பங்கள் வாழும், உலகத் தரம் வாய்ந்த பேக் தயாரிப்பு நடைபெறும் என்றார்.

Tags : Chipcott ,Ilaiyankudi , Ilayayankudi: Since there is an export quality bag company operating in Ilayayankudi, the government has taken appropriate steps to set up a Chipcot.
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி