×

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என கூறி அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2006 - 2011-ம் ஆண்டு வரை அப்போதைய திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோரின் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கனது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்பதால் தங்களை விடுவிக்க கூறி அமைச்சர் தங்கம் தென்னரசு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் விசாரித்த போது அவர்கள் குற்றம் செய்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை என கூறி இந்த வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Tags : Minister ,Thangam ,Southern government , Assets in excess of income, no prosecution, no custodianship, ministerial gold South Kingdom release
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்