ஆஸ்திரேலியாவில் கடத்தல்காரர்கள், காவல்துறை இடையே துப்பாக்கி சண்டை: 2 காவலர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் கடத்தல் காரர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 காவலர்கள் உள்ளிட்ட 6 பேரும் உயிரிழந்தனர். குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வியம்புலா என்ற பகுதியில் காணாமல் போன நபர் ஒருவர் தொடர்பான விசாரணைக்காக காவல்துறையினர் சென்றனர். அப்போது அங்குள்ள வீடுகளில் பதுங்கியிருந்த சிலர் காவல் துறையினரை நோக்கி தூப்பாக்கியால் சுட்டனர்.

காவலர்கள் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. தகவல் அறிந்து ஹெலிகாப்டரில் விரைந்து வந்த ஆயுத படையினரும் சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவத்தில் இரண்டு காவல் அதிகாரிகள் உயிரிழந்தனர். காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திய 1 பெண் உள்ளிட்ட 4 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து குயின்ஸ்லாந்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: