×

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் திருநங்கை; வீர விளையாட்டிலும் கால் பதிக்கும் மூன்றாம் பாலினத்தவர்..!

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் களமிறக்க 8 காளைகளுக்கு திருநங்கை ஒருவர் பயிற்சி அளித்து வருகிறார். வீர விளையாட்டில் கால்பதிக்கவும் மூன்றாம் பாலினத்தவர்கள் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்திப்பெற்றவையாகும். பொங்கல் நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்கள் போட்டிக்கு அவற்றை தயார்படுத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பொட்டப்பனையூர் பகுதியை சேர்ந்த கீர்த்தனா ஜல்லிக்கட்டில் களமிறக்க தான் வளர்க்கும் 8 காளைகளுக்கு தீவீர பயிற்சி அளித்து வருகிறார். காளைகளை பராமரிப்பதில் சக திருநங்கைகளும் உதவி வருகின்றனர். பல்வேறு துறைகளிலும் கால்பதித்து வரும் மூன்றாம் பாலினத்தை சேர்த்தவர்கள் வலிமை மற்றும் வீரத்தை பறைசாற்றுவதில் பாலினம் தடை அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் வீர விளையாட்டு களம் காணவும் தயாராகி வருகின்றனர்.


Tags : jallikutu , Jallikattu bull, training, transgender
× RELATED ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி...