×

வங்கக் கடலில் அந்தமான் தீவுக்கு தெற்கு பகுதியில் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளது: வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு அரபிக் கடல் பகுதிக்கு சென்றது. ஆனால் தமிழகத்தில் மழை நீடித்தபடி இருந்தது. இந்நிலையில், வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் மீண்டும் தீவிரமாக உள்ளது. வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் வருகிற 16ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக் கடலில் அந்தமான் தீவுக்கு தெற்கு பகுதியில் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்து 3 நாட்களில் வலுவிழக்கும் எனவும் கூறியுள்ளது.

Tags : Andaman Islands ,Bay of Bengal ,Meteorological , A new depression has formed south of the Andaman Islands in the Bay of Bengal: Meteorological Department informs
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...