காசி தமிழ் சங்கமத்தில் விளையாட்டின் மூலம் தமிழ்நாடு உ.பி. தொடர்பு: அமைச்சர் அனுராக் தாகூர் பேச்சு

வாரணாசி: உத்தர பிரதேசத்தில் காசி தமிழ் சங்கமத்தின் விழா நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக 8 நாட்கள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.இதனைத் தொடங்கி வைத்து பேசிய ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ``இலக்கியம், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. காசி தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பிரதமருக்கு நன்றி.

இதன் மூலம் `ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற தொலைநோக்குப் பார்வை உணர்த்தப்படுகிறது. தமிழகத்தில் இருந்து காசி தமிழ் சங்கமத்திற்கு வந்துள்ள தமிழக விளையாட்டு வீரர்களிடையே உற்சாகம் காணப்படுகிறது. இதன் மூலம் வடக்கு, தெற்கு பிராந்தியங்கள் இணைக்கப்படுகின்றன. அவற்றின் பாரம்பரியம் பிரதிபலிக்கிறது,’’ என்று தெரிவித்தார்.

Related Stories: