×

உச்சநீதிமன்ற நீதிபதி தீபாங்கர் பதவியேற்பு

புதுடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக  தீபங்கர் தத்தா நேற்று பதவி ஏற்றார். மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தாவுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கு ஒன்றியஅரசு ஒப்புதல் வழங்கிய நிலையில்,  ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, அவர் நேற்று பதவியேற்றார்.அவருக்கு தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனால் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Supreme Court ,Justice ,Dipankar , Supreme Court Justice Dipankar sworn in
× RELATED ஜாமினை நீட்டிக்கக் கோரிய கெஜ்ரிவால்...