×

தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை..!

ராணிப்பேட்டை : தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாறு அணைக்கட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு வினாடிக்கு 1724 கனஅடி உபரிநீர்  பாலாற்றில் திறக்கப்பட்டுள்ளது.

30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை:

இரு கரையோரங்களிலும் உள்ள 30 கிராமமக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாக்கம், முத்தவேடு, பிச்சவாடி, விஷார், ஆளவந்தார்மேடு, விப்பேடு, வெங்கடாபுரம், செவிலிமேடு ஊர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புஞ்சையரசன்தாங்கல், கோழிவாக்கம்,வளத்தோட்டம், குருவி மலை, விச்சந்தாங்கல், ஆசூர், அவலூர் ஊர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒரிக்கை, சின்னகயப்பாக்கம், கோயம்பாக்கம், வில்லிவளம், வெங்குடி, வாலாஜாபாத், பழையசீவரம், ஊர்களுக்கும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அங்கம்பாக்கம், திருமுக்கூடல், பினாயூர், திருமஞ்சேரி, சாத்தனஞ்சேரி கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கலியப்பேட்டை, ஒரக்காட்டுப்பேட்டை, காவித்தண்டலம், கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கால்நடைகளை பாலாற்றில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


Tags : Ranipet District Paladu , Risk of rain, hail, flood
× RELATED ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை