×

பூண்டி ஏரி தண்ணீர் திறப்பு எதிரொலி: 2 வது நாளாக போக்குவரத்துக்கு தடை

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள ஒதப்பை கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட  தரைப்பாலம் உள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தரைப்பாலம்  விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் பூண்டி ஏரியில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, நேற்று 10 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்காரணமாக ஒதப்பை பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் போக்குவரத்து இன்று 2வது நாளாக போக்குவரத்து முடங்கியது.

இந்த நிலையில், திருவள்ளூரில் இருந்து சீத்தஞ்சேரி, போந்தவாக்கம்,  ஊத்துக்கோட்டை செல்லும் மக்கள் பாலத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நடந்துசென்று மற்றொரு பகுதியில் நிற்கும் பஸ் ஆட்டோ வாகனங்களில் ஏறி ஊர்களுக்கு செல்கின்றனர். கார், பைக்குகளில் யாரும் பாலத்தை கடக்காமல் இருக்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒதப்பை பாலத்தின் வழியாக செல்ல வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டதால் திருவள்ளூர்  செல்ல முடியாமல் சீத்தஞ்சேரி, மயிலாப்பூர், தேவந்தவாக்கம், ஆட்ரம்பாக்கம்,  பென்னலூர்பேட்டை,  பெருஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தவிக்கின்றனர். மேலும் இவர்கள் திருவள்ளூர் செல்ல சீத்தஞ்சேரி வனப்பகுதி வழியாக வெங்கல்,  தாமரைப்பாக்கம் கூட்டு சாலை வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு திருவள்ளூர்  செல்கிறார்கள்.

Tags : Boondi lake , Boondi lake water release echo: Traffic blocked for 2nd day
× RELATED கொள்ளளவை அதிகரிப்பது தொடர்பாக உலக...